முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் கண்டு அஞ்சத் தேவையில்லை: முன்னாள் போட்டியாளர் அர்ச்சனா!

பிக் பாஸ் என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அனுபவம் என்கிறார் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர் அர்ச்சனா.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 11:32 AM
அர்ச்சனா - இன்ஸ்டாகிராம்
பகிர்:

பிக் பாஸ் என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அனுபவம் என்பதால், அதனைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

இம்முறை விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதால், பிக் பாஸ் சீசன் 8-ஐ மிகவும் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், மக்களில் ஒருவனாக இருந்து வருவதால் மக்களின் குரலாக அவர் இருப்பார் எனவும் அர்ச்சனா புகழாரம் சூட்டியுள்ளார்.

பிக் பாஸ் - 8 நிகழ்ச்சி அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. கடந்த 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார். இதனால் பிக் பாஸ் - 8 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

அர்ச்சனா - இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் பிக் பாஸ் -7 வெற்றியாளர் அர்ச்சனா இது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''பிக் பாஸின் இந்த சீசன் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். அதற்கு காரணம் விஜய் சேதுபதிதான். அவர் வெகுஜன மக்களிடம் இருந்து வருகிறார். அதனால்தான் அவரை மக்கள் செல்வன் என அழைக்கிறோம். அவர் நிச்சயம் மக்களின் குரலாக இருப்பார்.

நான் நடிகர் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய ரசிகை. பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது மெய்மறக்கச் செய்யும். அதற்கு காரணம் அவரின் அறிவாற்றல்தான். எந்தத் தலைப்பு குறித்தும் பேசக்கூடிய வல்லமை பெற்றவர். அதனால் பார்வையாளர்களை நிகழ்ச்சியின் நிலைநிறுத்தக்கூடியவர். அதனால், இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளராக அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருந்தார்'' எனத் தெரிவித்தார்.

பிக் பாஸ் -7 நிகழ்ச்சியில் வெற்றியாளர் கோப்பையைப் பெறும் அர்ச்சனா - இன்ஸ்டாகிராம்

பிக் பாஸ் கண்டு அஞ்ச வேண்டாம்

''பிக் பாஸ் நிகழ்ச்சியில் இம்முறை சில விஷயங்களில் மாற்றங்களைக் கொண்டுவரலாம். அப்படி செய்தால் அதனை நான் மிகவும் விரும்புவேன். சகோதர - சகோதரி, அப்பா - மகள் என அனைத்து உணர்வுகளையும் உறவுகளையும் பிரதிபலிக்கும் அழகான நிகழ்ச்சியாக பிக் பாஸ் உள்ளது. ஆனால், என்னுடைய சீசனில் அதனை நான் மிகவும் இழந்தேன். அதனால் அந்த உறவுகள் ஏற்படும் வகையிலான மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது என் விருப்பம்.

படிக்க | திரைப்படமாக ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடர்! புதிய முயற்சி!

பிக் பாஸ் நிகழ்ச்சியைக் கண்டு அஞ்ச வேண்டாம். இது மிகவும் அழகான நிகழ்ச்சி. பிக் பாஸ் என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அனுபவம். அதனால் அதனைக் கண்டு அஞ்சத்தேவையில்லை. வாழ்க்கையை மாற்றக்கூடிய வாய்ப்புகள் இந்த நிகழ்ச்சியின் மூலம் உருவாகலாம். இம்முறை யூடியூபர்களான வி.ஜே. சித்து, ஹர்ஷத் கான் ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும். பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இருக்காது'' என அர்ச்சனா குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments