நடிகை சாயிஷா வெளியிட்டுள்ள நடன விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
நடிகை சாயிஷா மீண்டும் சினிமாவில் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அவர் தொடர்ந்து நடன விடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் ராவடி என்ற பாடலுக்கு சாயிஷா நடனமாடியிருந்தார்.
3 மொழிப் படங்களில் சாயிஷா
நடிகை சாயிஷா தெலுங்கில் அகில் என்கிற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். பிறகு, அஜய் தேவ்கன் உடன் சிவாய் என்ற படத்தின் மூலம் ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.
அதனைத்தொடர்ந்து தமிழில் ஜெயம் ரவியுடன் வனமகன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழிலும் அறிமுகமானார். அதில் நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து 2018-ல் மட்டும் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, காப்பான் என மூன்று படங்களில் நடித்தார்.
டெடி, கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் தன்னுடன் நடித்த ஆர்யாவை கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை கவனிக்கும் பொருட்டு சினிமாவில் தற்காலிகமாக நடிக்காமல் இருந்தார்.
அடுத்தடுத்த நடன விடியோ
பொது நிகழ்ச்சிகளில் நடிகர் ஆர்யாவுடன் சாயிஷா கலந்துகொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி வருவது வழக்கம். சமீபகாலமாக சாயிஷா சமூக வலைதளத்தில் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் புகைப்படங்களை ரசிகர்களுடன் சமூகவலைதளத்தில் பகிர்ந்து வந்தார்.
குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில், சமீபத்தில் நடனமாடும் விடியோக்களை அடுத்தடுத்து சாயிஷா பதிவிட்டு வருகிறார்.
தற்போது குரு படத்தில் இடம்பெற்றிருந்த ’மையா மையா....’ பாடலுக்கு நடனமாடும் விடியோவை சாயிஷா பகிர்ந்துள்ளார். இந்த விடியோவைப் பலரும் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.