செய்திகள்

வேட்டையன் டிரைலர் தேதி!

வேட்டையன் டிரைலர்...

DIN

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா தயாரித்த இப்படம் வருகிற அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. விரைவில் டிரைலர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். 2 மணி நேரம் 47 நிமிடம் ரன்னிங் டைம் கொண்ட திரைப்படமாக வேட்டையன் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், நாளை மறுநாள் (அக். 2) அன்று படத்தின் டிரைலர் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு அஞ்சல் துறையில் 2,019 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

30 ஆண்டு கோரிக்கை! கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் திறப்பு!

கூஃபிஜென்னை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த்..! 1 கோடி பார்வைகளைக் கடந்த நடன விடியோ!

பிப். 15-ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

இதுபோன்ற விடியோக்களை வெளியிடுவது முதல்முறை! கிரண் ரிஜிஜு ராஜிநாமா செய்ய வேண்டும்!

SCROLL FOR NEXT