முகப்பு
செய்திகள்

தக் லைஃப் படப்பிடிப்பு எப்போது?

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது. படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

தக் லைஃப் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் புரோமோ விடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாத இறுதியில் துவங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.