கங்கனாவின் எமர்ஜென்சி வெளியீட்டுத் தேதி!
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள எமா்ஜென்சி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இந்திய பிரதமா் இந்திர காந்தி, கடந்த 1975-ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினாா். அவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தை தயாரித்து, இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை கங்கனா ரணாவத்.
இதையும் படிக்க: ஓடிடியில் நேரு!
இந்தப் படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருக்கும் இப்படம், வருகிற ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.