முகப்பு
செய்திகள்

இது ஆக்‌ஷன் மேடம்: இயக்குநரை கிண்டல் செய்த சந்தானம்!

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இயக்குநரை கிண்டல் செய்த நடிகர் சந்தானம். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:13 PM
பகிர்:

நகைச்சுவை நடிகர் சந்தானம் தற்போது நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாணின் 80-ஸ் பில்டப் என்ற படத்தில் சந்தானம் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

சந்தானம் நடித்து முடித்துள்ள புதிய திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. சந்தானத்துக்கு ஜோடியாக இப்படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் யோகி எழுதி இயக்கியுள்ளார். டி.ஜி. விஷ்வ பிரசாத்தின் பீபுள் மீடியா பேக்டரி இப்படத்தை தயாரிக்க ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். 

இப்படத்துக்கு தீபக் ஒளிப்பதிவு, மகேஷ் மேத்தீவ் சண்டைப் பயிற்சி, அறிவு மற்றும் பாக்கியம் சங்கர் பாடல்களை எழுதியுள்ளனர். வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வரும் பிப். 2 ஆம் தேதி வெளியாகிறது. 

இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி, “என்ன பேசுவது எனத் தெரியவில்லை. வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி” எனக் கூறுவார். அதற்கு சந்தானம், “இது ஆக்‌ஷன் மேடம்” எனக் கூறுவார். 

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கும் வார்த்தை 'இது ஆக்‌ஷன் மேடம்'. 9 வருடங்களுக்கு முன்பாக சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வெளியான விடியோவில் லாரன்ஸ் என்பவர் இதை கூறியிருப்பார். சந்தானத்தில் இந்தப் பேச்சு அனைவரையும் கவர்ந்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →