ஷாலினி பாண்டே 
செய்திகள்

உடை மாற்றும்போது இயக்குநர் அத்துமீறினார்: ஷாலினி பாண்டே

தனக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வை நடிகை ஷாலினி பாண்டே பகிர்ந்துள்ளார்...

DIN

இயக்குநர் ஒருவர் தான் உடைமாற்றும்போது அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் அறியப்படும் நாயகியாக இருப்பவர் ஷாலினி பாண்டே. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இந்தியளவில் புகழடைந்தவருக்கு அதன்பின் சரியான வெற்றிப்படம் கிடைக்கவில்லை.

தமிழில், 100 சதவீதம் காதல் மற்றும் நடிகர் ஜீவாவுடன் கொரில்லா ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அவை கவனிக்கப்படவில்லை.

தற்போது, நடிகர் தனுஷுடன் இட்லி கடை படத்தில் நடித்து முடித்துள்ளார். அண்மையில், நெட்பிளிக்ஸில் வெளியான டப்பா கார்டெல் இணையத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஷாலினி பாண்டே

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ஷாலினி பாண்டே, “நடிக்க வந்த ஆரம்பத்தில் தென்னிந்திய இயக்குநர் ஒருவர் நான் உடை மாற்றிக்கொண்டிருந்தபோது வேண்டுமென்றே கதவைத் தட்டாமல் என் கேரவனுக்குள் நுழைந்தார். உடனடியாக, நான் அவரைக் கண்டித்து வெளியே அனுப்பினேன். அப்போது எனக்கு 22 வயதுதான் என்பதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இச்சம்பத்திற்காக படக்குழுவினர் யாரும் எனக்கு ஆதரவாக இல்லை. நீ இப்போதுதான் நடிக்க வந்திருக்கிறாய்- இதை பெரிதுபடுத்தினால் உனக்கு பட வாய்ப்புகள் வராது என்றனர். நல்வாய்ப்பாக எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. கதவைத் தட்டாமல் அப்படி அவர் உள்ளே வந்தது தவறானது. என்னைத் தற்காத்துக்கொள்ள சிலநேரம் கோபமாகவும் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT