'நீ நான் காதல்' தொடர் ஹாட் ஸ்டார்
செய்திகள்

நிறைவடைகிறது நீ நான் காதல் தொடர்!

இறுதிக்கட்டத்தில் நீ நான் காதல் தொடரின் படப்பிடிப்பு.

DIN

நீ நான் காதல் தொடர் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

ஸ்டார் மா தொலைக்காட்சியின் பிரபல தொடரான 'நுவ்வு நேனு பிரேமா' என்ற தொடரின் மறு உருவாக்கமாக 'நீ நான் காதல்' தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2023 நவ 13 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'நீ நான் காதல்' தொடரின் பிரதான பாத்திரத்தில் பிரேம் ஜேக்கப், வர்ஷினி சுரேஷ், சங்கரேஷ் குமார், நவீன் முரளிதரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு 350 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

முழுக்க முழுக்க காதல் கதையாகவும், கணவன் மனைவி உறவை மையமாக வைத்தும் ஒளிபரப்பாகி இத்தொடர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இச்சூழலில் இத்தொடரின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் இத்தொடர் கூடிய விரைவில் நிறைவடையவுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

இந்தத் தகவல் நீ நான் காதல் தொடர் பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: ஹார்ட் பீட் - 2: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் திடீரென இடிந்து விழுந்த நெடுஞ்சாலையின் தடுப்பு சுவர்

ரூ.7.44 லட்சம் கோடி! வார்னர் பிரதர்ஸை கைபற்றிய நெட்பிளிக்ஸ்!

என்னைப் பார்த்ததும் “நான் உங்க Fan” என Vijay சொன்னார் - நாஞ்சில் சம்பத் | TVK

இசையிரவின் நடனம்... ஸ்ருதி சௌகான்!

சாக்கலேட் லவ் சேலை... ரேஷ்மா பசுபுலேட்டி!

SCROLL FOR NEXT