நடிகை கரீனா கபூர்.  
செய்திகள்

முட்டையைக்கூட வேக வைக்கத் தெரியாது: கரீனா கபூர்

நடிகை கரீனா கபூர் தனக்கு சமைக்கவே தெரியாது எனக் கூறியுள்ளார்.

DIN

நடிகை கரீனா கபூர் தனக்கு சமைக்கவே தெரியாது என்றும் முட்டையைக் கூட வேக வைக்கத் தெரியாது எனக் கூறியுள்ளார்.

ஹிந்தியில் 2000ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார் கரீனா கபூர். பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள கரீனா சில ஆண்டுகள் ஷாகீத் கபூரை காதலித்து வந்தார். பின்னர், நடிகர் சயிஃப் அலி கானை திருமணம் செய்தார்.

இந்தத் தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். 44 வயதாகும் கரீனாவின் கடைசியாக க்ரூ, சிங்கம் அகெய்ன் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன.

நடிகர் சயிஃப் அலி கான் மீது சமீபத்தில் கத்திக்குத்து நடந்ததும் குறிப்பிடத்தக்கது

முட்டையைக்கூட வேக வைக்கத் தெரியாது

இந்நிலையில், தனது ஊட்டச்சத்து வல்லுநர் ருதுஜா திவாகரின் ‘தி காமன்சென்ஸ் டயட்’ என்ற புத்தக விழாவில் கரீனா பேசியதாவது:

கடினமான வேலை நாள்களுக்குப் பிறகு வீட்டு சாப்பாடு சாபிடுவதுபோல் எதுவுமே வராது.

தற்போது, நானும் சயிஃப் அலி கானும் சமைக்க தொடங்கியுள்ளோம். நாங்கள் அதை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறோம்.

இது எங்களது ஆளுமையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சயிஃப் என்னைவிட சிறப்பாக சமைப்பார். எனக்கு முட்டையைக் கூட வேக வைக்கத் தெரியாது.

கிச்சடி மீதான காதல்

மூன்று நாளைக்கு கிச்சடியை சாப்பிடவில்லை எனில் எனது மனம் மீண்டும் எப்போது சாப்பிடுவது என ஏங்கத் தொடங்கிவிடும்.

10-15 நாள்களுக்கும் நான் ஒரே உணவை உண்ணவும் தயாராக இருப்பதால் எனது சமையல்காரர் கடுப்பாகிறார்.

வாரத்தில் 5 நாள்களுக்கும் கிச்சடி சாப்பிடுவதென்றாலும் எனக்கு மகிழ்ச்சிதான். மிருதுவான அந்தக் கட்டியின் மீது இருக்கும் நெய் எனக்கு மிகவும் பிடிக்கும்.

எங்கள் குடும்பத்துக்கே பாயா சூப் மிகவும் பிடிக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

விநாயகர் சதுர்த்தி... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT