ஒரேயொரு வாழ்க்கை வரலாறாக வாழ வேண்டும்...! விக்ரம் வெளியிட்ட விடியோ!
வீர தீர சூரன் குறித்து நடிகர் விக்ரம் வெளியிட்ட விடியோ...
வீர தீர சூரன் குறித்து நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
தங்கலான் படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன். சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கிய இந்தப் படம் கடந்த வியாழனன்று (மார்ச் 27) திரையரங்குகளில் வெளியானது.
நிதி பிரச்னையால் படம் வெளியான அன்று முதல் 2 காட்சிகள் திரையிடப்படவில்லை. மாலை 4 மணிக்கே முதல் காட்சி வெளியானது.
Advertisement
Advertisement
அதிரடியான ஆக்சன் படமாக உருவாகியிருந்த வீர தீர சூரன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
முக்கியமாக, கடந்த சில ஆண்டுகளில் வெளியான விக்ரம் படங்களில் ரசிகர்களைக் கவரும் கமர்ஷியல் அம்சங்களுடன் இந்தப் படமே இருந்ததாக அவரது ரசிகர்கள் கூறினர்.
ஒரேயொரு வாழ்க்கை வரலாறாக வாழ வேண்டும்
தனது இன்ஸ்டா பக்கத்தில் விக்ரம் கூறியதாவது:
ஒரேயொரு வாழ்க்கை வரலாறாக வாழ்ந்து... அப்படி என ஒருவன் எளிமையாக சொல்லிவிட்டு சென்றுவிட்டான் (மகான் பட வசனத்தை நினைவுக் கூறுகிறார்). ஆனால், இந்த வாழ்க்கை இருக்கிறதே எதாவது ஒரு பிரச்னையை தூக்கி வீசுகிறது.
உதாரணமாக வீர தீர சூரன் படம் ரிலீஸுக்கு முன்பாக பயங்கரமாக பாராட்டி அனைவரையும் ஆர்வத்தில் ஆழ்த்தினார். அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான், சட்டப் பிரச்னை. உயர் நீதிமன்றம் இதை 4 வாரங்களுக்கு தடை எனக் கூறியது.
நானும் எனது இயக்குநரும் இதில் நடித்த அனைவரும் மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறோம். ரசிகர்களிடம் எப்படியாவது இதைக் கொண்டு சேர்க்க வேண்டுமென நினைத்தோம். என்னால் செய்ய முடிந்ததைச் செய்தேன்.
பேராதரவுக்கு நன்றி
எனது ரசிகர்களுக்காக மிகவும் எதார்த்தமான, வித்தியாசமான கமர்ஷியல் படத்தை தர நினைத்துதான் இந்தப் படத்தில் நடித்தேன்.
முதலிரண்டு காட்சிகள் இல்லாமல் வெளியானால் அந்தப் படம் அவ்வளவுதான் என்பது வழக்கமானது. ஆனால், படம் வெளியான பிறகு மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்தது. குறிப்பாக குடும்பத்திடம் இருந்து பேராதரவு கிடைத்தது. உங்கள் அனைவருக்கும் நன்றி கூற வேண்டும்.
படம் பெரிய வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என உறுதியாக கூறுகிறேன். நாங்கள் நினைத்தது நடந்தது. படம் பார்த்தவர்கள் மகிழ்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். பார்க்காதவர்கள் பார்ப்பீர்கள் என நம்புகிறேன் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.