செய்திகள்

தனுஷ் குரலில் ‘ரெட்ட தல’ பாடல்!

தனுஷின் புதிய பாடல் குறித்து...

DIN

நடிகர் அருண் விஜய் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வணங்கான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கமர்ஷியலாக வெற்றியடைந்தது.

தொடர்ந்து, அருண் விஜய்யின் 36-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரலில் பூஜையுடன் தொடங்கியது. கிரிஸ் திருக்குமரன் இயக்கும் இப்படத்திற்கு, ’ரெட்ட தல’ எனப் பெயரிட்டுள்ளனர். அண்மையில், இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.

சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தில் சித்தி இத்னானி, தன்யா, பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் அருண் விஜய், இப்படத்தில் இரட்டை வேடத்தில் 4 தோற்றங்களில் நடித்துள்ளதாகவும் இப்படம் அடுத்தடுத்த திருப்பங்களுடன் உருவாகியுள்ளதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற காதல் பாடல் ஒன்றை நடிகர் தனுஷ் பாட உள்ளதாகவும் இதற்கான நடன காட்சிகளை மலேசியாவில் படமாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT