அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அல்லு அர்ஜுன் - அட்லி படம் குறித்து...
இயக்குநர் அட்லி - அல்லு அர்ஜுன் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜவான் படத்தின் மூலம் ரூ. 1000 கோடி வசூலித்துக் கொடுத்த இயக்குநர்கள் பட்டியலில் அட்லி இடம்பிடித்ததிலிருந்து அவர் அடுத்தது யாரை நாயகனாக வைத்து படம் இயக்குவார் என அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன.
அதேபோல், புஷ்பா மற்றும் புஷ்பா - 2 படங்களின் மூலம் இந்தியாவின் வசூல் மன்னனாக அல்லு அர்ஜுன் அவதாரம் எடுக்க, அடுத்ததாக இவர் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலாகக் காத்திருந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளனர்.
இப்படத்தின் கதை அறிவியல் புனைகதையாக உருவாகியிருப்பதால் அல்லு அர்ஜுனும், அட்லியும் அமெரிக்காவிலுள்ள பிரபல லோலா விஎஃப்எக்ஸ் நிறுவனத்திற்கு சென்று படத்தின் முதல்கட்ட பணிகளையும் துவங்கியுள்ளனர்.
ரூ. 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.