மெர்வென் பாலாஜி. 
செய்திகள்

பாண்டியன் ஸ்டோர் -2 சீரியலில் சக்திவேல் தொடர் நடிகர்!

பாண்டியன் ஸ்டோர் -2 சீரியலில் இணைந்த மெர்வென் பாலாஜி.

DIN

பாண்டியன் ஸ்டோர் -2 சீரியலில் சக்திவேல் தொடர் நடிக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகத்துக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகம் அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

தற்போது இரண்டாவது பாகம் அப்பா, மகன்களின் பிணைப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. மகன்களுக்கு திருமணம் செய்து வைத்து, மருமகள்கள் வந்த பிறகு குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை பின்னணியாக வைத்து தற்போது கதை நகர்ந்து வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு பாண்டியன் ஸ்டோரஸ் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரில் ஸ்டாலின், நிரோஷா, சரண்யா துராடி, வெங்கட் ரங்கநாதன், விஜே கதிர்வேல், ஹேமா ராஜ்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரின் புதிய பாத்திரத்தில் சக்திவேல் தொடர் நடிகர் மெர்வென் பாலாஜி இணைந்துள்ளார்.

இத்தொடரில் பாண்டியனின் மருமகனாக, அரசிக்கு ஜோடியாக நடிகர் மெர்வென் பாலாஜி நடிக்கிறார். இவர் சக்திவேல் தொடரில் சேரன் பாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ‘நம்பவே முடியாத கதை..’ அட்லியைப் பாராட்டிய லோலா விஎஃப்எக்ஸ் நிறுவனர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT