செய்திகள்

ரெட்ரோ டிரைலர் எப்போது?

ரெட்ரோ டிரைலர் குறித்து...

DIN

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் டிரைலர் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்சன் கலந்த காதல் கதையான இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகிறது.

பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் கண்ணாடி பூவே, கனிமா பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

முக்கியமாக, கனிமா பாடலில் நடிகை பூஜா ஹெக்டே நடனமாடிய பகுதிகளை இன்ஸ்டாவில் பலரும் ரீல்ஸ் செய்து பாடலை வைரலாகியுள்ளனர்.

இதற்கிடையே, படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என சூர்யா ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஏப். 18 ஆம் தேதி நடக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்று படத்தின் டிரைலரும் வெளியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜனவரி மாத ஒதுக்கீடு வெளியீடு

தீபாவளி: ரயில்வே முன்பதிவு மையம் செயல்படும் நேரம் அறிவிப்பு

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: டிரம்ப் நிா்வாகத்துக்கு எதிராக அமெரிக்க வா்த்தக சபை வழக்கு

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

இன்ஃபோசிஸ் வருவாய் ரூ.44,490 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT