செய்திகள்

குட் பேட் அக்லி: பெண் ரசிகைகளுக்கு சிறப்புக் காட்சி!

குட் பேட் அக்லி திரைப்படத்தின் சிறப்புக் காட்சி பற்றி...

DIN

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு பெண்களுக்கான சிறப்புக் காட்சி ஒளிபரப்பப்படுகிறது.

நடிகர் அஜித் குமார் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம், உலகம் முழுவதும் இன்று காலை 9 மணிக்கு வெளியானது.

அஜித்துடன் நடிகர்கள் த்ரிஷா, சுனில், சிம்ரன், அர்ஜுன் தாஸ், யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் சுவாரஸ்யமான காட்சிகள் இருக்கும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், திருப்பூரில் உள்ள பிரபல மல்பி பிளக்ஸ் திரையரங்கில் பெண்களுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாக திரையரங்கத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

மேலும், திரைப்படம் முடிந்தவுடன் சிறப்புக் காட்சியைக் கண்ட அனைத்து அஜித் ரசிகைகளுக்கும் திரையரங்கு சார்பில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்த திரையரங்கத்தின் நிர்வாகத்துக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழே கிடந்த ரூ. 2.45 லட்சத்தை ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு பாராட்டு

ரெட்டியபட்டி வெங்கடத்தி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு செப். 6, 7-இல் ஆளெடுப்பு

சீனிவாசன் கலை, அறிவியல் கல்லூரியில் ரோபோடிக் கண்காட்சி

அதிமுக முன்னாள் அமைச்சரின் வீடு, தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT