கண்ணப்பா போஸ்டர்.  படம்: எக்ஸ் / மோகன் பாபு
செய்திகள்

கண்ணப்பா ரிலீஸ் தேதி!

வரலாற்று புதினத்தை தழுவி உருவாகியுள்ள கண்ணப்பா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

வரலாற்று புதினத்தை தழுவி உருவாகியுள்ள கண்ணப்பா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

முகேஷ் குமார் சிங் இயக்க, மோகன் பாபு தயாரித்துள்ள இந்தப் படத்தில் மோகன்லால், பிரபு தேவா, அக்‌ஷய் குமார், மோகன் பாபு, சரத் குமார், காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன் எனப் பலர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படம் சிவ பக்தன் கண்ணப்பாவை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

ரிலீஸ் போஸ்டர்.

இந்தப் படம் வரும் ஜூன் 27ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

படக்குழுவினர் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை உ.பி. முதல்வரிடம் கொடுத்து ஆசிர்வாதம் பெற்றனர்.

பான் இந்திய படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை பல நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ், வட இந்தியாவில் பென் ஸ்டுடியோஸ், ஆந்திரா, தெலுங்கானாவில் ஆசியன் சுரேஷ் என்டர்டெயின்மென்ட், கேரளத்தில் கோகுலம் மூவிஸ், வெளி நாடுகளில் யஷ் ராஜ் ஃபிலிம்ஸும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொரசாமி

தமிழா... நீ முன்னோடி!

கைலாஷ் - மானசரோவர் யாத்திரை நிறைவு!

ஐந்தாவது சுதந்திரம்

சென்னையில் இதழியல் கல்வி நிறுவனத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

SCROLL FOR NEXT