நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு மூத்த நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் இன்று (ஏப்.10) உலகம் முழுவதும் வெளியானது.
இந்தப் படத்தில் அஜித்துடன் நடிகர்கள் த்ரிஷா, சுனில், சிம்ரன், அர்ஜுன் தாஸ், யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
திருப்பூரில் உள்ள பிரபல மல்பி பிளக்ஸ் திரையரங்கில் பெண்களுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில், “இன்று வெளியாகும் குட் பேட் அக்லி திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.
தற்போது, நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.
இது குறித்த கேள்விக்கு, “படப்பிடிப்பு தொடங்கி சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. எப்போது முடியுமெனத் தெரியாது” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.