செய்திகள்

கமல் - 237 படப்பிடிப்பு எப்போது?

கமல் - 237 படப்பிடிப்பு குறித்து....

DIN

நடிகர் கமல்ஹாசனின் 237-வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தக் லைஃப் திரைப்படத்திற்குப் பின் நடிகர் கமல்ஹாசன் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்திற்கான கதையை கமல்ஹாசனே எழுதியுள்ளார். மேலும், அமெரிக்கா சென்று ஏஐ தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொண்டதால் இப்படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் பங்கு இருக்கலாம் எனத் தெரிகிறது.

தற்போது, படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளில் இயக்குநர்கள் அன்பறிவ் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனராம்.

நடிகர் கமல்ஹாசனே தயாரிக்கும் படம் என்பதால் படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்களையும் கவனமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், முழுநீள ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் துவங்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: ஆஸ்கரில் புதிய பிரிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT