கேரளத்தில் ஜெயிலர் - 2 படப்பிடிப்பு!
ஜெயிலர் - 2 படப்பிடிப்பு குறித்து...
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் - 2 படத்தின் படப்பிடிப்பு கேரளத்தில் துவங்கியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்தைத் தொடர்ந்து ஜெயிலர் - 2 படத்தில் இணைந்துள்ளார். இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பான் இந்திய நடிகர்கள் நடிக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு சில நாள்களுக்கு முன் சென்னையில் துவங்கியது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பின் பகுதியாக கேரளத்திலுள்ள அட்டப்பாடியில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதில், நடிகர்கள் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், மிர்னா உள்ளிட்டோர் கலந்துகொண்டு நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு இடைவேளையில் அங்குள்ள ரசிகர்கள் ரஜினியைச் சந்தித்து உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: ரூ. 100 கோடி வசூலித்த குட் பேட் அக்லி!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.