செய்திகள்

விரைவில் குக் வித் கோமாளி - 6: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விரைவில் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சி.

DIN

குக் வித் கோமாளியின் ஆறாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பு செய்யப்படுவதால் இந்நிகழ்ச்சிக்கு பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். எப்போதும் இந்நிகழ்ச்சிக்கு டிஆர்பி புள்ளிகள் அதிகமாகவே இருக்கும்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் விரைவில் 6-வது சீசன் தொடங்கவுள்ளது.

சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கவுள்ளனர்.

இந்த புதிய சீசனில் பங்கேற்கவுள்ள குக்குகள் மற்றும் கோமாளிகள் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. முந்தைய சீசன்களில் பங்கேற்ற கோமாளிகளும்(சமையல் தெரியதாவர்), புதிதாக சில கோமாளிகளும் இந்த சீசனில் பங்கேற்கவுள்ளனர்.

முந்தைய சீசன்களில் கோமாளிகளாக பங்கேற்ற சுனிதா, புகழ், சரத், ராமர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். புதிய கோமாளியாக பிக் பாஸ் பிரபலம் செளந்தர்யா பங்கேற்கவுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், குக் வித் கோமாளி - 6 நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய சீசன் தொடங்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: 8 ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு! தடுக்கச் சென்ற ஆசிரியர் தாக்கப்பட்டார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!

நடிகரானார் டூரிஸ்ட் ஃபேமலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்!

வாக்குரிமைப் பேரணி: பிகாரிலிருந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்!

மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கையால் வேலையிழப்பு அதிகரிக்கும்: கார்கே

SCROLL FOR NEXT