கனிகா, சாக்‌ஷி அகர்வால் இன்ஸ்டாகிராம்
செய்திகள்

தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர்களாக கனிகா, சாக்‌ஷி அகர்வால்!

நடிகைகளாக கவனம் பெற்ற கனிகா மற்றும் சாக்‌ஷி அகர்வால் ரியாலிட்டி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகப் பங்கேற்கவுள்ளனர்.

DIN

நடிகைகளாக கவனம் பெற்ற கனிகா மற்றும் சாக்‌ஷி அகர்வால் ரியாலிட்டி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகப் பங்கேற்கவுள்ளனர்.

சின்ன திரை பிரபலங்கள் போட்டியாளர்களாகப் பங்குபெறும் நாங்க ரெடி நீங்க ரெடியா என்ற நிகழ்ச்சியில் இருவரும் நடுவர்களாக இருந்து போட்டியின் சுவாரசியத்தைக் கூட்டவுள்ளனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியில் நடன இயக்குநர் ஸ்ரீதரும் மற்றொரு நடுவராகப் பங்கேற்கிறார்.

சின்ன திரை நடிகர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நடனம், பாடல், மேடை நாடகம் என பல்வேறு பிரிவுகளில் நாங்க ரெடி நீங்க ரெடியா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்களில் வெறும் கதாபாத்திரங்களாக மட்டுமே பார்த்தவர்களை இந்த நிகழ்ச்சியில், பல்வேறு கோணங்களில் ரசிகர்கள் பார்ப்பதால் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நாங்க ரெடி நீங்க ரெடியா

இந்நிலையில், நாங்க ரெடி நீங்க ரெடியா நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் நடிகை கனிகாவும் சாக்‌ஷி அகர்வாலும் புதிய நடுவர்களாகப் பங்கேற்கின்றனர்.

மணிரத்னம் தயாரிப்பில் உருவான ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கனிகா, தென்னிந்திய சினிமாவின் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறினார். மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி போன்ற நட்சத்திர நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர். தற்போது சன் தொலைக்காட்சியின் எதிர்நீச்சல் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கனிகா, சாக்‌ஷி அகர்வால்

இதேபோன்று மாடலிங் துறையில் சாதித்த இளம் பெண்ணாக திரைத் துறையில் நுழைந்தவர் சாக்‌ஷி அகர்வால், 2013ஆம் ஆண்டு கார்ப்பரேட் நிறுவனத்தில் இருந்து விலகி, முழுநேர நடிகையாக மாறினார். கககபோ, காலா போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்குப் பிறகு படங்களில் நாயகியாகவும் நடிக்கத் தொடங்கினார். சிண்ட்ரெல்லா, அரண்மலை 3, பஹீரா உள்ளிட்ட படங்களில் நாயகியாக ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். தற்போது ரியாலிட்டி நிகழ்ச்சி நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியை விஜே ராகேஷ் - பூஜிதா இணை தொகுத்து வழங்குகிறது.

இதையும் படிக்க | கருவுற்று இருப்பதை அறிவித்த சின்ன திரை நடிகை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாழ்க்கைத் துணையாகும் வாசிப்பு

பழையன கழிதல்!

சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்

SCROLL FOR NEXT