தக் லைஃப் போஸ்டர் 
செய்திகள்

ஜிங்குச்சா... தக் லைஃப் முதல் பாடல் அறிவிப்பு!

DIN

நடிகர் கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் தக் லைஃப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பின் இணையும் திரைப்படம் ‘தக் லைஃப்’.

நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், நாசர், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு துவங்கப்பட்டது. சென்னை, தில்லி, ரஷியா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பு கடந்த செப்டம்பரில் நிறைவடைந்தது.

படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு டீசரில் கமல், சிம்பு ஆகியோரின் தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

படம் ஜூன் 5 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி இன்று அறிவிக்கப்பட்டது.

’ஜிங்குச்சா’ எனும் இந்தப் பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளார். பாடல் ஏப். 18 அன்று வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதயநிதிக்கே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் பொருள் சரியாகத் தெரியவில்லை: தமிழிசை

அக்டோபரில் உச்சம் தொட்ட கார்கள் விற்பனை!

மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 23 பேர் பலி

எங்களிடம் அது இல்லையா? மாரி செல்வராஜைக் கேள்விகேட்ட நடிகை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்ப்பது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

SCROLL FOR NEXT