திருமண நிச்சயதார்த்தம் 
செய்திகள்

நடிகர் அர்ஜூன் மகள் அஞ்சனாவுக்கு டும்.. டும்..! 13 வருடக் காதலாம்!!

நடிகர் அர்ஜூன் 2வது மகள் அஞ்சனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

DIN

அஞ்சனா.. அதிகம் அறியப்படாத.. ஆனால், மிகப் பிரபலமான நடிகரின் மகள். ஆம்.. நடிகர் அர்ஜூனின் இளைய மகள்தான் அஞ்சனா. இவருக்கு அண்மையில் நீண்டநாள் காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

மிகக் கோலாகலமாக நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அந்த புகைப்படங்களை சஞ்சனா பகிர்ந்து, தனது 13 ஆண்டு கால கனவு நிறைவேறியதாக மிகவும் உணர்ச்சிப்பொங்க பதிவிட்டுள்ளார்.

தீயை விடவும் வேகமாக, இந்த செய்தி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அர்ஜூன் ரசிகர்களும், திரைத்துறை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் அர்ஜூன் போலவே, அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவும் திரைப் பிரபலம்தான். அவரும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் நடிகர் தம்பி ராமையாவின் மகனை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது நடிகர் அர்ஜூன் குடும்பத்தில் இளைய மகளுக்கும் காதல் திருமணம் நடைபெறவிருக்கிறது.

அஞ்சனா அர்ஜூன், தற்போது சார்ஜா வேர்ல்டு என்ற நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகியாக உள்ளார். இந்த நிறுவனத்தின் நிறுவனரும் அஞ்சனாதான். இவரது திருமண நிச்சயதார்த்தம் இத்தாலியில் நடைபெற்றுள்ளது. காரணம், அஞ்சனாவின் காதலர் இத்தாலியைச் சேர்ந்தவர். மிக ரம்மியமான பின்னணியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காமராஜா் சந்தையில் பாதையில் உள்ள கடைகளை அகற்ற கோரிக்கை

கரூா் சம்பவத்தில் தவறு செய்தவா்கள் இன்னும் பாடம் கற்கவில்லை: கி.வீரமணி

கும்பகோணத்தில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கரூா் துயரச் சம்பவம்: சிறப்பு விசாரணைக் குழுவினா் முன்னிலையில் சேலம் தவெக மத்திய மாவட்டச் செயலா் ஆஜா்

சூடான்: துணை ராணுவ தாக்குதலில் 53 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT