புதிய சீரியல் வருகை: பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் தொடர்பாக...
விஜய் தொலைக்காட்சியில் புதிய சீரியலின் வருகையால் பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சின்ன திரையில் ஒளிபரப்பப்படும் தொடர்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களை இளைய தலைமுறையினர் அதிகம் விரும்பி பார்க்கின்றனர்.
சிறகடிக்க ஆசை, ஐய்யனார் துணை உள்ளிட்ட தொடர்கள் டிஆர்பியில் முன்னணியில் உள்ளது.
Advertisement
Advertisement
நீ நான் காதல் தொடர் நிறைவடையவுள்ள நிலையில், இத்தொடர் ஒளிபரப்பாகும் மாலை 6 மணிக்கு ஆஹா கல்யாணம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
புதிய தொடரான பூங்காற்றுத் திரும்புமா தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
மகாநதி தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், இத்தொடர் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
வரும் ஏப். 28 ஆம் தேதி இந்த புதிய நேரத்தின்படி தொடர்கள் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: டிஆர்பியில் முதல்முறை நடந்த மாற்றம்! சிறகடிக்க ஆசை தொடருக்கு வரவேற்பு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.