அல்போன்ஸ் புத்திரன், கார்த்திக் சுப்புராஜ். படம்: எக்ஸ் / கார்த்திக் சுப்புராஜ்.
செய்திகள்

பிரேமம் பட இயக்குநரின் கைவண்ணத்தில் ரெட்ரோ டிரைலர்!

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் டிரைலரை அல்போன்ஸ் புத்திரன் கட் செய்துள்ளார்.

DIN

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் டிரைலரை அல்போன்ஸ் புத்திரன் கட் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ரெட்ரோ திரைப்படத்தின் டிரைலர் இன்று (ஏப்.18) மாலை வெளியாகவிருக்கிறது.

ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பென்ச் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.

இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. 2.48 மணி நேரம்கொண்ட படமாக இது உருவாகியிருப்பதகாவும் கூறப்படுகிறது.

நேரம், பிரேமம் என ஹிட் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் உடல்நிலை காரணமாக தற்போது படங்கள் இயக்குவதில் இருந்து விலகியுள்ளார்.

கடைசியாக அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இந்நிலையில், டிரைலரை பிரேமம் படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கட் செய்திருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் நிபந்தனையில் தளா்வு: உச்சநீதிமன்றம்

சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜைகள்

கிருஷ்ணகிரியில் மூத்தோா் தடகளப் போட்டி

ஒசூரில் தொழிலாளி குத்திக் கொலை: மனைவி உள்பட 4 போ் கைது

ஒசூா் தன்வந்திரி பகவான் கோயிலில் வருடாபிஷேக விழா தொடக்கம்

SCROLL FOR NEXT