சச்சின் பட போஸ்டர்.  படம்: எக்ஸ் / கோபுரம் சினிமாஸ்.
செய்திகள்

சச்சின் மறுவெளியீட்டில் சாதனை! கில்லி வசூலை முறியடிக்குமா?

நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் இன்று (ஏப்.18) மறுவெளியீடானது.

DIN

நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் இன்று (ஏப்.18) மறுவெளியீடானது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கி 2005-ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் நடித்திருந்தனர். கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார்.

சந்திரமுகி படத்துடன் இணைந்து வெளியானதால் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் ஓரளவு நல்ல வசூலை இப்படம் பெற்றது.

காதல், நகைச்சுவை என அனைவராலும் ரசிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான பாடல்களும் பெரிதும் கொண்டாடப்பட்டன.

இப்படம் வெளியாகி இந்தாண்டுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனால் மறுவெளியீடானது.

ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் மட்டும் இதுவரை 52,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையானதாக தயாரிப்பாளர் எஸ்.தாணு, “சச்சின் மறுவெளியீட்டில் சரித்திரம், சாதனை, சகாப்தம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் நடித்த கில்லி திரைப்படம் கடந்தாண்டு மறுவெளியீடு செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்த நிலையில் இந்தப் படமும் நல்ல வசூலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று மறுவெளியீடாகியுள்ள சச்சின் திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலோடு பார்த்து வருவதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசத்தும் லோகா! ஹிருதயப்பூர்வம், ஓடும் குதிரை சாடும் குதிரை நிலவரம் என்ன?

லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டி: மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி தோல்வி!

தமிழ்நாடு அனைத்துத் துறையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஃபிளிப்கார்டில் ஆப்பிள் ஐஃபோன் 16 விலையில் மாபெரும் தள்ளுபடி!

டிபிஎல்: முதல்முறையாக கோப்பையை வென்றது வெஸ்ட் தில்லி!

SCROLL FOR NEXT