செய்திகள்

என் வாழ்க்கை நோக்கம் இதுதான்: சூர்யா

ரெட்ரோ டிரைலர் விழாவில் நடிகர் சூர்யா பேசியவை...

DIN

நடிகர் சூர்யா தன் வாழ்க்கையின் நோக்கம் குறித்து பேசியுள்ளார்.

சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

மே 1 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா நேற்று (ஏப். 18) சென்னையில் நடைபெற்றது.

விழாவில் பேசிய நடிகர் சூர்யா, “நான் இங்க வந்தபோது பலரும் என்னிடம் நல்லா இருக்கீங்களா? எனக் கேட்டனர். உங்களின் அன்பு இருந்தால்போதும் எப்போதும் நான் நன்றாக இருப்பேன். வாழ்க்கையை நம்புகள். வாய்ப்புகளைத் தவறவீடாதீர்கள். ரெட்ரோ படத்தில் நானும் பூஜா ஹெக்டோவும் தம்மம் பற்றி பேசுவோம். நம் வாழ்க்கையின் நோக்கம் என்ன? என் வாழ்க்கையின் நோக்கம் அகரம் ஃபவுண்டேஷன்.

ஒரு நடிகராக இருப்பதைவிட அகரம் நிறுவனத்தைப் பலரிடமும் கொண்டு சேர்த்ததைத்தான் பெரிதாக நினைக்கிறேன். இதுவரை 7,000-க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கியுள்ளோம். இதை சாத்தியப்படுத்திய அகரம் அமைப்பினர் அனைவருக்கும் நன்றி.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை ஐஐடி மீண்டும் தேசிய தரவரிசையில் முதலிடம்: ஏழாவது ஆண்டாக ஆதிக்கம்!

40 படங்களில் நடித்துவிட்டேன், ஆனால்... துல்கர் சல்மான் பேச்சு!

யுஎஸ் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியர்!

ஒரு நாடு, ஒரு வரி, ஒரு நாடு ஒன்பது வரிகளாக மாறியது எப்படி?: மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

பீலிக்கான் முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT