நாயகன், இயக்குநருடன் நடிகை ரைசா இன்ஸ்டாகிராம்
செய்திகள்

பிக் பாஸ் புகழ் ரைசா நடித்த படம் என்னவானது?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஒப்பந்தமான ரைசாவின் படம் குறித்து...

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகை ரைசா வில்சன் நடித்த காதலிக்க யாரும் இல்லை படம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

2019ஆம் ஆண்டே படத்தின் முதல் பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை அப்படம் குறித்த எந்தவொரு தகவலும் இல்லாததால், ரைசாவின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் அஜித் குமார், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் படம் குறித்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர். ஆனால், தற்போது பிக் பாஸ் ரைசாவின் ரசிகர்கள் இதே பாணியை மேற்கொள்வதாகப் பலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இப்படம் கைவிடப்பட்டதா? அப்படியென்றால், அந்த அறிவிப்பையாவது வெளியிட வேண்டும் என்பது போன்ற பதிவுகள் ரைசாவின் ஒவ்வொரு சமூக வலைதளப் பதிவுகளிலும் கேட்கப்படுகிறது.

என்ன படம்?

நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமாருடன் காதலிக்க யாரும் இல்லை என்ற படத்தில் நாயகியாக நடிக்க ரைசா ஒப்பந்தமானார்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கிவந்தார். ஹைவே காதலி என்ற இவரின் குறும்படம் பலரால் பாராட்டப்பட்ட நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

காதலிக்க யாரும் இல்லை படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமாரே இசைமைக்கிறார். ஆனால், இதற்கடுத்து பல படங்கள் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியாகிவிட்டன. ஆனால், காதலிக்க யாரும் இல்லை படம் என்னவானதென்றே தெரியவில்லை.

இதையும் படிக்க | எஸ்.வி. சேகர் யாரென்றே தெரியாது! அவருக்கு ஜோடியாக நடிக்கும் ஷோபனா கருத்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! முதல்வர்கள் ஸ்டாலின், பகவந்த் மான் தொடங்கி வைத்தனர்!

25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..! அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!

நிதி நெருக்கடி காரணமாக தில்லி மெட்ரோ ரயில் டிக்கெட் விலை உயா்வு

இந்தியா - பாக். சண்டையில் வீழ்த்தப்பட்டது 5 விமானங்கள் அல்ல, 7..! டிரம்ப்

SCROLL FOR NEXT