கார்த்தி வெளியிட்ட ஜி.வி. பிரகாஷின் மெண்டல் மனதில் பட முதல் பாடல்!
மெண்டல் மனதில் பட முதல் பாடல் வெளியாகியுள்ளது குறித்து...
ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் “மெண்டல் மனதில்” திரைப்படத்தின் “உயிரே உயிரே” எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “மெண்டல் மனதில்”. இப்படத்தில், நடிகை மாதுரி ஜெயின் நாயகியாக நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கும் இப்படம் ஜி.வி. பிரகாஷின் இசையில் உருவாகின்றது. மேலும், இந்தப் படத்தில் நடிகை சீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், “மெண்டல் மனதில்” திரைப்படத்தின் “உயிரே உயிரே” எனும் முதல் பாடலை, தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி புதன்கிழமை (பிப். 25) வெளியிட்டுள்ளார்.
'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன' படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள செல்வராகவன் - ஜி வி. பிரகாஷ் குமார் கூட்டணியால் இருவரின் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
The first song, from the movie “Mental Manathil” starring G.V. Prakash Kumar, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.