முகப்பு
செய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி பட டிரைலரை வெளியிட்ட அட்லி!

இயக்குநர் அட்லி டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.

Updated On : 23 ஏப்ரல், 2025 at 5:26 PM
டூரிஸ்ட் ஃபேமிலி போஸ்டர். - படம்: எக்ஸ் / அட்லி
பகிர்:

இயக்குநர் அட்லி டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisement

குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது

இலங்கைத் தமிழர்களின் வாழ்வை நகைச்சுவையுடன் பேசும் விதமாக இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வருகின்ற மே.1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் அடங்கிய ஜூக்பாக்ஸ் சமீபத்தில் வெளியாகிய நிலையில் தற்போது படத்தின் டிரைலரை இயக்குநர் அட்லி வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் அட்லி தற்போது அல்லு அர்ஜுனை வைத்து புதிய படத்தினை இயக்கவிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.