முகப்பு
செய்திகள்

ராக்கா பல ஆண்டு கனவு: அட்லி

ராக்கா திரைப்படம் குறித்து அட்லி...

Updated On : 8 ஏப்ரல் 2026, 1:03 pm IST
அட்லி - insta
பகிர்:

இயக்குநர் அட்லி தன் புதிய திரைப்படம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் அட்லி நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு ராக்கா எனப் பெயரிட்டுள்ளனர்.

ஆச்சரியப்படும் வகையில் பான் உலகத் திரைப்படமாக ஆங்கிலம், கொரிய, சீன மொழிகளிலும் இப்படம் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ராக்கா வணிக ரீதியாகவும் மிகப்பெரிய கவனம் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பெயர் போஸ்டரை பகிர்ந்த அட்லி, “ராக்கா வெறும் திரைப்படம் அல்ல. பல ஆண்டுகளாக என்னுள் இருக்கும் பகுதி. இந்தக் கருவை 18 ஆண்டுகளாக அப்படியே வைத்திருக்கிறேன். இது என்னைச் சோதித்திருக்கிறது, என்னைச் செதுக்கியிருக்கிறது, என்னுடனே இருந்திருக்கிறது. நேர்மையாகச் சொல்கிறேன், இது வெறும் துவக்கம்தான்.” எனத் தெரிவித்துள்ளார்.

ராக்கா படத்திற்காக உலகின் முதன்மையான விஎஃப்எக்ஸ் நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன. ஒட்டுமொத்த படப்பிடிப்பும் மும்பையில் செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

summary

director atlee said, Rakka is not merely a film; it is a part of me that has existed within me for many years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.