ஹிட் 3 படத்தின் போஸ்டர்.  
செய்திகள்

அனிமல், மார்கோ படங்களைவிட வித்தியாசமான வன்முறை..! ஹிட் 3 படம் குறித்து நானி!

நடிகர் நானி நடித்துள்ள ஹிட் 3 படம் குறித்து அவர் பேசியதாவது...

DIN

அனிமல், மார்கோ படங்களைவிட ஹிட் 3 படத்தின் வன்முறை வித்தியாசமானதாக இருக்குமென நானி கூறியுள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானியின் நடிப்பில் கடைசியாக வெளியான சரிபோத சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை) திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிப் படமானது.

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

சைலேஜ் கொலனு இயக்கத்தில் நானி நடித்த ஹிட் - 3 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

வால் போஸ்டர் சினிமா, அனானிமஸ் புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற மே.1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். ஹிட் படத்தின் முதலிரண்டு பாகங்கள் அபார வெற்றி பெற்றன.

ஹிட் 3 படத்துக்கு ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் வன்முறை அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

மார்கோ, அனிமல் படத்தினை விட இந்தப் படத்தின் வன்முறை வித்தியாசமாக இருக்குமெனக் கூறப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

நேர்காணல் ஒன்றில் நானி பேசியதாவது:

ஹிட் 3 படத்தின் வன்முறை அதிகமாக இருப்பதாக டிரைலரில் தெரியும். ஆனால், படமாக பார்க்கும்போது வேறுமாதிரி இருக்கும்.

விவரணைகளுடன் விசாரணை செய்துகொண்டே த்ரில்லர் கதையாக பயணிக்கும் இந்தப் படத்தில் வன்முறை வேண்டுமென்றே இருப்பதாகத் தெரியாது.

கதையில் அடுத்து என்ன நிகழ்கிறது, ஏன் அப்படி நடக்கிறது? என சுவாரசியமாக பயணிக்கும் இந்தப் படத்தில் வரும் வன்முறைக்கு நீங்களே கை தட்டல் அளிப்பீர்கள்.

எழுத்து நன்றாக இருக்கும்போது இப்படியான விஷயங்கள் நடக்கும். திரையரங்கில் நல்ல அனுபவத்தை அளிக்கும். அனிமல் படமும் இதைச் செய்தது. மார்கோ பார்க்கவில்லை. இந்தப் படத்தின் கதை வேறுமாதிரி இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுகமான நாளில் எம்வீ ஃபோட்டோ வாலாட்டிக் பங்குகள் 1% உயர்வு!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை | செய்திகள்: சில வரிகளில் | 18.11.25

தில்லி கார் வெடிப்பு: கைதான ஜசிர் பிலாலுக்கு 10 நாள்கள் விசாரணைக் காவல்!

ஆஷஸ் தொடர்: வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் கொடுத்த அறிவுரை!

சசிகுமாரின் மை லார்ட்..! சின்மயி குரலில் முதல் பாடல்!

SCROLL FOR NEXT