மிஷன் இம்பாஸிபிள்: தி ஃபைனல் ரெக்கனிங் படத்தில்... dinamani
செய்திகள்

இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகும் மிஷன் இம்பாசிபிள்!

உலகப் புகழ்பெற்ற மிஷன்: இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங் திரைப்படம் வெளியீட்டைப் பற்றி...

DIN

மிஷன் இம்பாசிபில் தி ஃபைனல் ரெக்கனிங் திரைப்படம் இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகின்றது.

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் அதிரடி ஸ்டண்டுகளுக்கு புகழ்பெற்ற மிஷன் இம்பாசிபில் திரைப்படங்களின் 8வது பாகமான மிஷன்: இம்பாசிபில் - தி ஃபைனல் ரெக்கனிங் படத்தின் டிரைலர் கடந்த ஏப்.7 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இந்நிலையில், இந்தியாவிலுள்ள மிஷன் இம்பாசிபில் படங்கள் மற்றும் டாம் க்ரூஸின் ரசிகர்களுக்கு மேலும் ஒரு புதிய உற்சாக அறிவிப்பை அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பாரமௌண்ட் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

எட்டாவது பாகமான மிஷன்: இம்பாசிபில் - தி ஃபைனல் ரெக்கனிங் திரைப்படம் உலகளவில் வரும் மே.23 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தியாவில் முன்கூட்டியே மே.17 அன்று வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்யூரி இயக்த்தில் உருவான இந்தப் படம் வரும் மே.14 ஆம் தேதி கான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

பிற நாடுகளை விட 6 நாள்கள் முன்பு இந்தியத் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:மறுவெளியீட்டில் ரூ.10 கோடியைக் கடந்த சச்சின்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பணமோசடி வழக்கு: அனில் அம்பானியின் ரூ.3,000 கோடி சொத்துகள் முடக்கம்!

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி, 150 பேர் காயம்!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! மீனவர்கள் 35 பேர் கைது

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT