செய்திகள்

ஓடிடியிலும் வரவேற்பைப் பெற்ற வீர தீர சூரன்!

வீர தீர சூரன் ஓடிடி வரவேற்பு குறித்து...

DIN

விக்ரமின் வீர தீர சூரன் - 2 திரைப்படம் ஓடிடியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குநர் அருண் குமார் இயக்கிய வீர தீர சூரன் - 2 படத்தில் நாயகனாக விக்ரமும் முக்கிய கதாபாத்திரங்களில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த மார்ச் 21 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் ரூ. 70 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது.

முழுக்க சண்டைப்படமாகவே உருவாக்கப்பட்டதால் சில ஆக்‌ஷன் காட்சிகள் புதிதாக இருந்ததுடன் கிளைமேக்ஸுக்கு முந்தைய 16 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியும் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

தொடர்ந்து, வீர தீர சூரன் -2 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வியாழக்கிழமை வெளியானது.

சில படங்கள் திரையரங்கில் வரவேற்பைப் பெற்றாலும் ஓடிடியில் விமர்சனத்திற்குள்ளாகும் ஆனால் இப்படம் ஓடிடி வெளியீட்டுக்குக் காத்திருந்தவர்களையும் பெரிதாகக் கவர்ந்திருக்கிறது. சில காட்சிகளைக் குறிப்பிட்டு பலரும் விக்ரம் மற்றும் இயக்குநரைப் பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியா - உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு: வெள்ளை மாளிகை

மேட்டூர் அணை 5-ஆவது முறையாக நிரம்பியது!

மேட்டூர் அணை நிலவரம்!

ஹிமாசலில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்! பீதியில் மக்கள்!

திருப்பனந்தாள் மடத்தின் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் முக்தியடைந்தார்

SCROLL FOR NEXT