திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

விஜய் சேதுபதியின் புதிய பட பெயர் இதுவா?

விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் படத்தின் பெயர் குறித்து...

News image
Updated On :26 ஏப்ரல் 2025, 3:12 pm IST

நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் பூரி ஜெகன்நாத் கூட்டணி படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.

தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கினின் டிரெயின் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

தொடர்ந்து, பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். பான் இந்திய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது.

இதனை பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி கவுர் இணைந்து தயாரிக்கின்றனர். ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்கு ‘பெக்கர்’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பான் இந்திய படமென்பதால் அனைத்து ரசிகர்களுக்கும் புரியும்படியாக பெயர் இருக்க வேண்டும் என்பதற்காக இப்பெயரை வைத்ததாகத் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.