செய்திகள்

நிறைவடைந்தது நீ நான் காதல் தொடர்!

நீ நான் காதல் தொடர் நிறைவு தொடர்பாக...

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நீ நான் காதல் தொடர் நிறைவடைந்துள்ளது.

ஸ்டார் மா தொலைக்காட்சியின் பிரபல தொடரான 'நுவ்வு நேனு பிரேமா' என்ற தொடரின் மறு உருவாக்கமாக 'நீ நான் காதல்' தொடர் எடுக்கப்பட்டு வந்தது.

இத்தொடர் கடந்த 2023 நவ 13 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த நிலையில், பிரதான பாத்திரத்தில் பிரேம் ஜேக்கப், வர்ஷினி சுரேஷ், சங்கரேஷ் குமார், நவீன் முரளிதரன் உள்ளிட்டோர் நடித்து வந்தனர்.

முழுக்க முழுக்க காதல் கதையாகவும், கணவன் மனைவி உறவை மையமாக வைத்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.

இந்நிலையில், நீ நான் காதல் தொடர் 384 எபிசோடுகளுடன் நிறைவடைந்துள்ளது.

மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நீ நான் காதல் தொடர் நிறைவடைந்தது, இத்தொடரை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீ நான் காதல் தொடர் நிறைவடைந்த நிலையில், இத்தொடர் ஒளிபரப்பான மாலை 6 மணிக்கு ஆஹா கல்யாணம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்

மயிலாடுதுறையில் ஆசிரியா்களுக்கு விருது

எலப்பாக்கம்-ஆனைகுனம் சாலையை சீரமைக்க கோரிக்கை

இன்று 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு!

லாரி மோதி மற்றொரு லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT