நிகழ்ச்சியில் பேசும் டி.ஜே. ஞானவேல். 
செய்திகள்

போர் அடிப்படை மனிதத் தன்மையற்றது: இயக்குநர் ஞானவேல்

பஹல்காம் தாக்குதல் குறித்து இயக்குநர் டி.ஜே. ஞானவேல் கருத்து.

DIN

பஹல்காம் தாக்குதல் குறித்து இயக்குநர் டி.ஜே. ஞானவேல் கருத்து தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது

மே 1 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில், சசிகுமார், விஜய் ஆண்டனி, சமுத்திரகனி, ஞானவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் டி. ஜே. ஞானவேல், ”போர் அடிப்படை மனிதத் தன்மையற்றது. அது என்ன அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று தெரியாது. போருக்கான அடிப்படை அறத்தை மீறக்கூடாது. பெண்கள், நோயாளிகள், கால்நடைகள் அப்புறப்படுத்திவிட்டுதான் போரை அறிவிக்க வேண்டும் என்று தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது.

சுற்றுலா தளத்தில் பாதுகாப்பில்லை, மருத்துவத்துக்காக வந்த பாகிஸ்தானிய குழந்தையை 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்ற துரதிஷ்டமும் அதில் வருகிறது. ஒரு விளைவு மற்றொரு விளைவை ஏற்படுத்துகிறது.

போரால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கான அதிர்வுகளின் பாதிப்புகள் அதிகம். போர் பற்றிய வலிகளை இப்படம் சொன்னாலும் நகைச்சுவையாக கதை எடுக்கப்பட்டுள்ளது” என்று பேசினார்.

இயக்குநர் ஞானவேல் பேசிய விடியோ மக்களின் கவனத்தை ஈர்த்து வருவதுடன் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: 96 - 2 படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை மீண்டும் ரூ. 75 ஆயிரத்தை கடந்தது!

விநாயகர் சதுர்த்தி: தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

விநாயகா் சதுா்த்தி: விநாயகர் கோயில்களில் திரளமான பக்தர்கள் தரிசனம்

SCROLL FOR NEXT