தேஜஸ்வினி கெளடா இன்ஸ்டாகிராம்
செய்திகள்

வீட்டில் குடும்பப் பெண், வெளியே புரட்சிப் பெண்: தேஜஸ்வினியின் புதிய தொடர் அயலி!

வித்யா நம்பர் 1 தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை தேஜஸ்வினி அயலி என்ற புதிய தொடரில் நடிக்கவுள்ளார்.

DIN

வித்யா நம்பர் 1 தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை தேஜஸ்வினி அயலி என்ற புதிய தொடரில் நடிக்கவுள்ளார்.

இந்தத் தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் வீட்டில் இருக்கும்போது பெரியோர்களுக்கு கட்டுப்பட்டு அவர்கள் (தவறாகவே சொன்னாலும்) சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் பெண்ணாகவும், வெளியே இதற்கு நேர்மாறாக எதற்கும் அஞ்சாமல், அநியாயத்தை எதிர்க்கும் புரட்சிப் பெண்ணாகவும் நடித்துள்ளார்.

இருவேறு பாத்திரங்களின் தன்மையை வெளிப்படுத்தும் வகையிலான கதையம்சம் கொண்டதால், இதில் தேஜஸ்வினியின் நடிப்பு திறமை முழுமையாக வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தொடரில் நாயகனாக ஆனந்த் செல்வன் நடிக்கிறார். கார்த்திகை தீபம், நினைத்தாலே இனிக்கும், சந்தியா ராகம் வரிசையில் இந்தத் தொடரையும் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளது.

அயலி

ஒளிபரப்பு நேரம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. எனினும் பிரைம் டைம் எனப்படும் முக்கிய நேரத்திலேயே ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொடரில் அயலி என்ற பாத்திரத்தில் நடித்துவரும் தேஜஸ்வினி, தனது நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் களமாக இத்தொடர் இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

இவர் இதற்கு முன்பு நடித்த வித்யா நம்பர் ஒன் என்ற தொடர் விமர்சன ரீதியாக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதோடு மட்டுமின்றி 2016-ல் தெலுங்கு மொழியில் கோயிலம்மா என்ற தொடரில் அறிமுகமான தேஜஸ்வினி, 2018-ல் கன்னட மொழித் தொடரிலும் நடித்துள்ளார்.

பின்னர் 2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற தொடரின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். தற்போது தமிழில் இவரின் மூன்றாவது தொடராக அயலி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

இதையும் படிக்க | விஜய் டிவி பிரச்னைக்கு அடுத்த நாளே ஜீ தமிழில் வாய்ப்பு: மணிமேகலை உருக்கம்

இதையும் படிக்க | ’நீ நான் காதல்’ நாயகியின் புதிய தொடர் அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிஎஸ்டி 2.0: மாநில நிதியமைச்சா்களிடம் நிா்மலா சீதாராமன் விளக்கம்

பதவிப் பறிப்பு மசோதா மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் -முதல்வா் ஸ்டாலின்

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

பெண் தொழிலாளா்களுக்கு சம ஊதியம் வழங்கக் கோரிக்கை

நாகை-தூத்துக்குடி பசுமைச் சாலை: திட்ட அறிக்கைக்கான ஒப்பந்தப்புள்ளி கோரல்

SCROLL FOR NEXT