நடிகை வர்ஷினி சுரேஷ். 
செய்திகள்

’நீ நான் காதல்’ நாயகியின் புதிய தொடர் அறிவிப்பு!

அவினாஷ் - வர்ஷினி சுரேஷ் நடிக்கும் புதிய தொடர்.

DIN

அண்மையில் நிறைவடைந்த நீ நான் காதல் சீரியல் நாயகியின் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நீ நான் காதல் தொடர் சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இத்தொடரின் பிரதான பாத்திரத்தில் நடிகை வர்ஷினி சுரேஷ் நடித்திருந்தார்.

இத்தொடரில் அபி என்ற பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்ற இவருக்கு, ஹார்ட் பீட் வெப் தொடரில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. இதில் சோனியா என்ற பாத்திரத்தில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்த நிலையில், ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகி வரும் மகுவா ஓ மகுவா தொடரின் மறு உருவாக்கமாக எடுக்கப்படும் புதிய தொடரில் நடிகை வர்ஷினி சுரேஷ் நடிக்கிறார்.

இத்தொடரில், இவருக்கு ஜோடியாக நடிகர் அவினாஷ் நடிப்பதால், ரசிகர்கள் மத்தியில் இத்தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த புதிய தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

நடிகர் அவினாஷ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகு தொடரின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் கயல் தொடரில் கயலின் தம்பியாக அவினாஷ் நடித்திருந்தார். பின்னர் அத்தொடரில் இருந்து விலகினார்.

இதனைத் தொடர்ந்து, வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் கண்ணன் என்ற முக்கியமான பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே அவினாஷ் பிரபலமானார்.

தற்போது, நடிகர் அவினாஷ் புதிய தொடரில் நாயகனாக நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: குக் வித் கோமாளி - 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் புதிய கோமாளிகள் யார்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT