பிரபல ராப் பாடகரான பாட்ஷாவின் மீது பஞ்சாப் மாநில காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாலிவுட் திரையுலகில் தனது ராப் பாடல்கள் மூலம் ரசிகர்களைப் பெற்றவர் பாடகர் பாட்ஷா (எ) ஆதித்யா பிரதீக் சிங் (வயது 39). இவர், தற்போது வெளியிட்டுள்ள ‘வெல்வட் ஃப்ளோ’ எனும் புதிய பாடலில் இடம்பெற்றுள்ள சொற்கள் மிகப் பெரியளவில் சர்ச்சையாகியுள்ளன.
அந்தப் பாடலில் அவர் ‘பைபிள்’ மற்றும் ‘சர்ச்’ உள்ளிட்ட கிறிஸ்தவ மதம் சம்பந்தமான சொற்களை அவமதிக்கும் வகையில் இணைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அவருக்கு எதிராக பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், குளோபல் கிறிஸ்டியன் ஆக்ஷன் கமிட்டி எனும் அமைப்பின் பிரதிநிதியான இமானுவேல் மசிஹ் என்பவர் ராப் பாடகர் பாட்ஷா கிறிஸ்தவ மக்களின் மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி பட்டாலா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குர்தாஸ்பூர் மாவட்டத்திலுள்ள அவரது வீட்டின் முன்பு நேற்று (ஏப்.29) கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரூ.100 கோடி வசூலித்த துடரும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.