X | G.V.Prakash Kumar
செய்திகள்

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

2023 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

2023 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இவற்றில் சிறந்த இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் (வாத்தி படத்துக்காக) விருது பெற்றுள்ளார்.

இரண்டாவது முறையாக தேசிய விருதுபெறும் ஜி.வி. பிரகாஷ், தனக்கு கிடைத்த விருதுக்காக நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தனது எக்ஸ் பக்கத்தில்,

இரண்டாவது முறையாக ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தேசிய விருது பயணத்துக்காக வாத்தி படக்குழுவினருக்கு எனது நன்றி.

வாத்தி படத்துக்காக என்னைத் தேர்ந்தெடுத்த சகோதரர் தனுஷுக்கு எனது மனமார்ந்த நன்றி. பொல்லாதவன் முதல் அசுரன், வாத்தி, இட்லி கடை வரையில் எங்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு, எங்கள் இருவருக்கும் ஆக்கப்பூர்வமாக பலனளித்து வருகிறது.

என்னுடைய சிறந்த படைப்பை வழங்க, என்னை ஊக்கப்படுத்திய மற்றும் என்னை நம்பிய இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு ஒரு பெரிய நன்றி.

என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் நாகவம்சி, திரிவிக்ரமுக்கு நன்றி.

எனது குடும்பத்தினர், இசைக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அன்பு நண்பர்கள், என்னை ஆதரித்து நம்பிய எனது ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி என்று குறிப்பிட்டத்துடன், பிரபஞ்சத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: தேசிய விருது பெற்ற கிங் கான்! சிறந்த நடிகராக ஜவான் ஷாருக்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT