கிங்டம் படத்தின் வசூல் போஸ்டர்.  
செய்திகள்

நாம் வென்றுவிட்டோம்..! கிங்டம் வசூல் வேட்டைக்கு விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி!

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் முதல்நாள் வசூல் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் திரைப்படம் முதல்நாளில் ரூ.39 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கடைசியாக, இவர் கல்கி 2898 ஏடி எனும் திரைப்படத்தில் அர்ஜுனர் பாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, நடிகர் விஜய் தேவரகொண்டா ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் திரைப்படம் நேற்று (ஜூலை 31) உலகம் முழுவதும் வெளியானது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இருப்பினும் வசூலில் அசத்தியுள்ளது.

உலகம் முழுவதும் முதல்நாளில் ரூ.39 கோடி வசூலித்தது அசத்தியுள்ளது. இதனைப் பகிர்ந்த விஜய் தேவர்கொண்டா, “நாம் வென்றுவிட்டோம்” என தெலுங்கில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

ஹிந்தியில் விழா எதுவும் இல்லாத நாளில் வெளியாகி இவ்வளவு வசூலித்துள்ளது என படக்குழு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

சமந்தாவுடன் நடித்த குஷி திரைப்படம் முதல் மூன்று நாளில் ரூ.70 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT