ஆச்சர்யமூட்டும் தலைவன் தலைவி படத்தின் வசூல்!
பாண்டிராஜ் இயக்கிய தலைவன் தலைவி படத்தின் வசூல் குறித்து...
பாண்டிராஜ் இயக்கிய தலைவன் தலைவி படத்தின் வசூல் ரூ.75 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கணவன் - மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Advertisement
Advertisement
தமிழில் கிடைத்த வரவேற்பால் இப்படம் தெலுங்கிலும் வெளியானது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
தலைவன் தலைவி படத்தில் இடம் பெற்றிருந்த 'பொட்டல முட்டாயே’ பாடலை யூடியூப்-ல் 3 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
இந்நிலையில், இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: ரெட்ட தல டீசர் அப்டேட்!
The team of the film Thalaivan Thalaivi, directed by Pandiraj, has announced that the collection of the film has crossed Rs. 75 crore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.