செய்திகள்

கடந்த 3 வாரங்களில் உச்சம் தொட்ட எதிர்நீச்சல் -2 டிஆர்பி!

எதிர்நீச்சல் தொடருக்கான டிஆர்பி கடந்த மூன்று வாரங்களில் உச்சத்தை எட்டியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

எதிர்நீச்சல் தொடருக்கான டிஆர்பி கடந்த மூன்று வாரங்களில் உச்சத்தை எட்டியுள்ளது.

எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது படிப்படியாக அதிக டிஆர்பி பட்டியலில் எதிர்நீச்சல் -2 இணைந்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் இந்த வாரம் முதல் சனிக்கிழமை ஒளிபரப்பாகாது. அதற்கு பதிலாக திங்கள் - வெள்ளி வரை மட்டுமே ஒளிபரப்பாகவுள்ளது.

எனினும், டிஆர்பி புள்ளிப் பட்டியலில் எதிர்நீச்சல் -2 தொடர் தொடர்ந்து தனது புள்ளிகளை அதிகரித்து வருகிறது. 27வது வாரத்தில் 8.36 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றிருந்தது. 28வது வாரத்தில் 8.49 புள்ளிகளாக அதிகரித்த நிலையில், இந்த வாரத்தில் 8.90 புள்ளிகளாக டிஆர்பி அதிகரித்துள்ளது.

கடந்த 3 வாரங்களாக எதிர்நீச்சல் -2 தொடரின் டிஆர்பி புள்ளிகள் தொடர்ந்து அதிகரித்துள்ளதால், மீண்டும் பழைய நிலைக்கு எதிர்நீச்சல் வந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எதிர்நீச்சல் முதல் பாகமானது, மற்ற தொடர்களை பின்னுக்குத்தள்ளி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. ஆனால், எதிர்நீச்சல் -2 தொடரானது, டாப் 5 இடங்களில் ஒன்றாக மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சல் -2 தொடரில் பார்வதி, கனிஷ்கா, ஹரிபிரியா இசை, பிரியதர்ஷினி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முதல் பாகத்தில் இருந்த நடிகர்கள் பலரும் இந்த பாகத்திலும் தொடர்கின்றனர்.

தற்போது, ஆதி குணசேகரன் மகனின் காதல் - திருமணம் குறித்த காட்சிகள் இடம் பெற்றுவருவதால் பல்வேறு திருப்பங்கள் ஏற்படுகின்றன. இதனால், தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | நாதஸ்வரம் சீரியலின் கின்னஸ் சாதனை குறித்துப் பேசிய நடிகை!

The TRP for the serial ethirneechal -2 has reached its peak in the last three weeks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாங்கண்ணியில் மிர்னாளினி ரவி!

ஏன் ஹிந்தியில் பேச வேண்டும்? வைரலான கஜோல்!

மலையும் மழையும்... ரைசா வில்சன்!

மிஸ்பண்ணிடாதீங்க... எய்ம்ஸ்-இல் 3,500 நர்சிங் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

வங்க மொழி சர்ச்சை: நீண்ட பதாகைகளுடன் போராடிய கால்பந்து ரசிகர்கள்!

SCROLL FOR NEXT