ராமேஸ்வரத்தில் லோகேஷ் கனகராஜ் படம் - எக்ஸ்
செய்திகள்

கூலி ரிலீஸ்... ராமேஸ்வரத்தில் புனித நீராடி வழிபட்ட லோகேஷ் கனகராஜ்!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார்.

கூலி திரைப்படம் நாளை மறுநாள் (ஆக. 14) வெளியாகவுள்ளதையொட்டி, இப்படத்துக்கான புரமோஷன் பணிகள் முடிந்த நிலையில், சாமி தரிசனத்திற்காக ராமேஸ்வரத்திற்கு அவர் சென்றுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் உலகம் முழுவதும் ஆக. 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. பான் இந்தியா படம் என்பதற்கேற்ப இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் நாகர்ஜுனா, ஆமீர்கான், உபேந்திரா, செளபின் சாஹிர் என மற்ற மொழி நடிகர்களும் நடித்துள்ளனர்.

லியோ படம் வசூல் ரீதியாக வெற்றியாக இருந்தாலும், கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் கூலி படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இணைய தளங்களில் செய்யப்பட்டுள்ள டிக்கெட் முன்பதிவுகளே இதற்கு சான்றாக உள்ளன.

இப்படத்துக்கான பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியின் விடியோக்கள் நேற்றுமுதல் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. சமூக வலைதளங்களில் கூலி படத்தைப் பற்றிய விடியோக்களும் புகைப்படங்களும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.

இதனிடையே ராமேஸ்வரம் கோயிலில் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம் செய்த விடியோவையும் ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்க | மகாபாரதப் பணிகளைத் துவங்கும் ஆமிர் கான்!

Director Lokesh kanagaraj in rameswaram temple ahead of cooli release

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி என் பயணத்தின் பொக்கிஷம்: லோகேஷ் கனகராஜ்

ஊராட்சி அலுவலகங்களில் கிராம உதவியாளர் பணி!

அகமதாபாத்தில் காமல்வெல்த் 2030! இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல்!

ஜீரோ டூ ஹீரோ..! கர்ப்பிணி மனைவியை கவனித்துக்கொள்ள ரூ.1.2 கோடி வேலையை உதறித்தள்ளிய இளைஞர்!

ஆரோக்கியமாக வாழ ஆசையா? 10 பழக்கங்கள்தான்! ஹார்வர்டு மருத்துவரின் டிப்ஸ்

SCROLL FOR NEXT