இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
குட் டே
இயக்குநர் என். அரவிந்தன் இயக்கத்தில் காளி வெங்கட், பகவதி பெருமாள், மைனா நந்தினி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான குட் டே திரைப்படம் நாளை(ஆக. 15) சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகிறது.
ஜே.எஸ்.கே - ஜானகி V v/s ஸ்டேட் ஆஃப் கேரளா
அனுபமா பரமேஸ்வரன், சுரேஷ் கோபி நடிப்பில் வெளியான மலையாள மொழிப் படமான ஜே.எஸ்.கே - ஜானகி V v/s ஸ்டேட் ஆஃப் கேரளா, ஜீ5 ஓடிடியில் நாளை வெளியாகிறது.
Advertisement
அஃகேனம்
அறிமுக இயக்குநர் உதய் இயக்கத்தில் வெளியான அஃகேனம் எனும் படத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சீதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் நாளை ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகிறது.
கான்ஸ்டபிள் கனகம்
பிரசாந்த் குமார் இயக்கியுள்ள தெலுங்கு மொழி இணையத் தொடர் கான்ஸ்டபிள் கனகம். திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தொடர் ஈடிவி வின் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
டாக் மேன்
பீட்டர் ஹேஸ்டிங்ஸ் இயக்கிய அனிமேஷன் படம் டாக் மேன் திரைப்படம், ஜியோ ஹாட் ஸ்டாரில் காணக்கிடைக்கிறது.
கடந்த வார ஓடிடியில்
இந்தப் படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான மாமன் திரைப்படத்தை ஜி5 ஓடிடியிலும் பறந்து போ திரைப்படத்தை ஹாட் ஸ்டாரிலும் ஓஹோ எந்தன் பேபி படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் டிரெண்டிங் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் பார்க்கலாம்.