முகப்பு
செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து....

Updated On : 2 ஏப்ரல் 2026, 7:47 pm IST
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! - சித்திரிப்பு / விஜய்
பகிர்:

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

வடம்

வடம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை (ஏப். 3) வெளியாகிறது.

இந்தப் படத்தில் விமலுடன் நட்டி நட்ராஜன், சனஸ்கா ஸ்ரீ, முனீஸ்காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்​’ நரேன், ஷரவண சக்​தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

சித்தாரே ஜமின் பர்

நடிகர் ஆமிர் கானின் சித்தாரே ஜமின் பர் படம் சோனி லைவ் ஓடிடியில் நாளை வெளியாகிறது.

ஆமிர் கான் புரடக்‌ஷன் தயாரிப்பில் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் உருவான இந்தப் படம், கடந்தாண்டு ஜூன் 20ஆம் தேதி யூடியூபில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

மிருத்யுஞ்சய்

ஸ்ரீ ஹுசைன் ஷா கிரண் இயக்கத்தில் ஸ்ரீ விஷ்ணு மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடிப்பில் வெளியான திரில்லர் திரைப்படம் மிருத்யுஞ்சய்.

இந்தத் திரைப்படம் நாளை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

வெள்ளப்பம்

பிரவீன் ராஜ் பூக்காடன் இயக்கத்தில், அக்‌ஷய் ராதாகிருஷ்ணன் மற்றும் நூரின் ஷெரீப் நடிப்பில் வெளியான மலையாளத் திரைப்படம் வெள்ளப்பம்.

காதல் மற்றும் நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

லவ் பாலிசி

நகைச்சுவை மற்றும் காதல் கலந்து தெலுங்கு மொழியில் வெளியான திரைப்படம் லவ் பாலிசி.

இந்தத் திரைப்படத்தை ஏப். 5 ஆம் தேதி ஈடிவி வின் ஓடிடி தளத்தில் காணலாம்.

கடந்த வார ஓடிடி (சப்தம்)

நடிகர் ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சப்தம். ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகனே, இப்படத்தையும் இயக்கியுள்ளார்.

ஓராண்டு கழித்து தற்போது ஜீ5 ஓடிடியில் சப்தம் வெளியாகியுள்ளது.

முத்து என்கிற காட்டான்

இயக்குநர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள “முத்து என்கிற காட்டான்” இணையத் தொடரில் நாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இந்த இணையத் தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

மாயபிம்பம்

கே. ஜே. சுரேந்தர் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் மாயபிம்பம். இந்தப் படத்தில் ஆகாஷ் நடராஜன், ஜானகி சீனிவாசன், ஹரி ருத்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

மஸ்திஷ்கா மரணம்

ரஜிஷா விஜயன் நடித்த நகைச்சுவை கலந்த திரில்லர் திரைப்படம் மஸ்திஷ்கா மரணம்.

மலையாள மொழிப்படமான மஸ்திஷ்கா மரணம் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.

வலது வஸதே கள்ளன்

ஜோஜு ஜோர்ஜ் மற்றும் பிஜு மேனன் நடித்த மலையாள மொழிப்படமான வலது வஸதே கள்ளன் திரைப்படத்தை மனோரமா மேக்ஸ், சிம்பிளி செளத் ஓடிடியில் பார்க்கலாம்.

ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இப்படம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.

summary

You can see which movies and web series are releasing this week on OTT platforms.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.