தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூலித்த கூலி!
கூலி தமிழக வசூல் குறித்து...
கூலி திரைப்படத்தின் தமிழக வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
படத்திற்கான புரமோஷன்கள் மற்றும் எதிர்பார்ப்பு உச்சமடைய பிரம்மாண்டமாக கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
ஆனால், மோசமான கதை மற்றும் திரைக்கதையாலும் அதனால் உருவான லாஜிக் பிரச்னைகளாலும் கூலி திரைப்படம் கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்துள்ளது. இதனால், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜைப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கூலி திரைப்படம் முதல் 4 நாள்களில் ரூ.380 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, தமிழகத்தில் கூலி ரூ. 100 கோடியை வசூலித்துவிட்டதாம். இப்படம் முதல் நாளிலேயே ரூ. 151 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வார முடிவில் ரூ. 600 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: டாக்ஸிக் படத்தில் ருக்மணி வசந்த்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.