அரசன் அப்டேட்!
அரசன் திரைப்படம் குறித்து...
அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அரசன் திரைப்படம் கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளது. இதில், நாயகனாக நடிகர் சிலம்பரசன் மூன்று தோற்றங்களில் நடிக்கவுள்ளார். இளவயதிலிருந்து ரௌடியாக மாறும் வரையிலான பரிணாமம் இருப்பதால், சிலம்பரசன் கதாபாத்திரத்திற்கு கூடுதல் காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை மதுரையில் நிறைவு செய்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இதில், வடசென்னை செட்கள் அமைக்கப்பட்டு காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நடிகர்கள் சிலம்பரசன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்டோர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் வெற்றி மாறன் தயாரிப்பாளர் தாணு கூட்டணியில் உருவாகும் திரைப்படம் என்பதால், விரைவாக இந்தாண்டு இறுதிக்குள் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.
arasan movie second schedule shoot starts in chennai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.