டாக்ஸிக் படத்தில் ருக்மணி வசந்த்!
டாக்ஸிக் படத்தில் ருக்மணி வசந்த்...
நடிகை ருக்மணி வசந்த் டாக்ஸிக் திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் யஷ் நடிப்பில் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ’டாக்ஸிக்’. கேஜிஎஃப் - 2 படத்திற்கு அடுத்ததாக யஷ் நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
கேவிஎன் புரோடக்ஷன்ஸ் மற்றும் நடிகர் யாஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு, மும்பையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், டாக்ஸிக் திரைப்படத்தில் பிரபல நடிகை ருக்மணி வசந்த் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: மம்மூட்டியின் களம் காவல் அப்டேட்!
actor rukmini vasanth joins yash's toxic movie
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.